என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சவுதி இளவரசர்"
- துருக்கியில் உள்ள சவுதி அரேபியா துணைத் தூதரகத்தில் பத்திரிகையாளர் ஜமால் கசோகி கொலை செய்யப்பட்டார்.
- அவரை கொலை செய்ய உத்தரவிட்டதாக சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் மீது வழக்கு தொடரப்பட்டது.
வாஷிங்டன்:
அமெரிக்காவைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கசோகி சவுதி அரேபிய அரச குடும்பத்தின் தீவிர விமர்சகராக இருந்தார். கடந்த 2017-ம் ஆண்டில் சவுதி அரேபியாவில் இருந்து வெளியேறி அமெரிக்காவில் தஞ்சம் அடைந்தார். துருக்கி பெண்ணான ஹதீஜா ஜென்கிஸை காதலித்தார். அவரை திருமணம் செய்ய முடிவு செய்த அவர், முதல் திருமணத்தின் மணமுறிவு ஆவணங்களைப் பெற 2018-ம் ஆண்டு அக்டோபர் 2-ம் தேதி இஸ்தான்புல்லில் உள்ள சவுதி துணைத் தூதரகத்துக்குச் சென்றார். ஆனால் திரும்பி வரவில்லை.
இதையடுத்து, துருக்கி அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தூதரகத்துக்கு உள்ளே பதிவான ரகசிய உரையாடல்களை வைத்து கசோகி மிகவும் கொடூரமான முறையில் கொல்லப்பட்டிருப்பது தெரியவந்தது. துருக்கியில் உள்ள சவுதி அரேபியா துணைத் தூதரகத்தில் கொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் ஜமால் கசோகியை கொலை செய்ய உத்தரவிட்டதாக, சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் மீது அமெரிக்காவில் வழக்கு தொடரப்பட்டது.
ஹதீஜா ஜென்கிஸ் மற்றும் கசோகியால் நிறுவப்பட்ட உரிமைக் குழு இந்த வழக்கைத் தொடர்ந்தது. இந்த வழக்கில் இளவரசரின் இரண்டு உதவியாளர்களும் குற்றம்சாட்டப்பட்டனர்.
இதற்கிடையே, சவுதி அரேபியாவின் மன்னர் சல்மான், தனது மகன் இளவரசர் முகமதுவை பிரதமராக நியமித்தார். இதையடுத்து அமெரிக்க அரசு, பிற நாடுகளின் நீதிமன்றங்களில் இருந்து அரசாங்கத் தலைவர்களுக்கு விலக்கு பெறுவதற்கான நீண்டகால சட்ட முன்மாதிரியை குறிப்பிட்டு முகமது பின் சல்மான் சமீபத்தில் பிரதமராக பதவியேற்றிருந்தாலும் அவருக்கு இறையாண்மை விலக்கு அளிக்கவேண்டும் என கோரியது.
இது முகமது பின் சல்மானை பாதுகாக்கும் சூழ்ச்சி என்று கஷோகியின் வருங்கால மனைவி மற்றும் அவரது உரிமைகள் குழு வாதிட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அமெரிக்க அரசு அவருக்கு விலக்கு அளிக்க தகுதி இருப்பதாக கண்டறிந்ததால் இந்த வழக்கை தள்ளுபடி செய்வதைத் தவிர வேறு வழியில்லை என தெரிவித்த நீதிபதி, இந்த வழக்கில் இருந்து அவரை விடுவித்தார்.
மேலும், குற்றம் சாட்டப்பட்ட அவரது உதவியாளர்கள் மீது அமெரிக்க கோர்ட்டுக்கு அதிகாரம் இல்லை என தெரிவித்தார்.
பின்னர், வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருடன் சவுதி இளவரசர் தனித்தனியாக ஆலோசனை நடத்தினார். இதனைதொடர்ந்து, இருநாடுகளின் பிரதிநிதிகள் இந்தியா-சவுதி அரேபியா இடையிலான நல்லுறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையின்போது சுற்றுலா, ஒளிபரப்பு உள்ளிட்ட 5 துறைகள் சார்ந்த முக்கிய ஒப்பந்தங்கள் கையொப்பமாகின.
இந்த ஒப்பந்தத்தையடுத்து, சவுதி இளவரசரும் பிரதமர் மோடியும் செய்தியாளர்களுக்கு கூட்டாக பேட்டியளித்தனர்.
புல்வாமா தாக்குதலை சுட்டிக்காட்டி பேசிய மோடி, பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகள் மீது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைக்கு சவுதி அரேபியா ஆதரவு தெரிவித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாக அமைந்துள்ளதாக குறிப்பிட்டார்.
சர்வதேச சூரிய ஆற்றல் கூட்டமைப்பில் இணைய சம்மதம் தெரிவித்துள்ள சவுதி அரசை வரவேற்பதாகவும் இந்தியா-சவுதி இடையிலான ராணுவ கூட்டுறவை பலப்படுத்துவது தொடர்பாக இன்று நடந்த பேச்சுவார்த்தை பயனுள்ள வகையில் அமைந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
பின்னர் பேசிய இளவரசர் முஹம்மது பின் சல்மான், ‘தீவிரவாதமும் பயங்கரவாதமும் நமது பொதுவான பிரச்சனைகளாக இருந்து வருகின்றன. பயங்கரவாதத்தை வேரறுக்க உளவுத்தகவல் பரிமாற்றம் உள்ளிட்ட அனைத்து வகையிலும் எங்களது நட்புநாடான இந்தியாவுக்கு சவுதி அரேபியா உறுதுணையாக இருக்கும். வருங்கால தலைமுறையினரின் எதிர்காலம் ஒளிமயமாக அமைய உங்களுடன் ஒன்றிணைந்து நாங்கள் செயலாற்றுவோம்’ என்று உறுதியளித்தார்.
பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகள் மீதான அழுத்தத்தை அதிகரிப்பதும், தண்டிப்பதும் முக்கியமானது என்னும் இந்தியாவின் நிலைப்பாட்டை சவுதி அரேபியா ஆதரிக்கின்றது. இந்தியாவில் பயங்கரவாதத்தை வேரறுக்க துணையாக இருப்போம் எனவும் சவுதி இளவரசர் தெரிவித்தார். #Modi #SaudiPrince #IndiaSaudiagree
சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், முதலாவது அரசு முறை பயணமாக பாகிஸ்தான், இந்தியா, மலேசியா, இந்தோனேசியா ஆகிய 4 நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதில், பாகிஸ்தான் பயணத்தை நிறைவு செய்து தனி விமானம் மூலம் நேற்று இரவு டெல்லி வந்து சேர்ந்தார். அவரை டெல்லி விமான நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார். மேலும், வெளியுறவுத்துறை இணை மந்திரி வி.கே.சிங் மலர்ச்செண்டு அளித்து வரவேற்றார்.
முன்னதாக வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், சவுதி இளவரசரை சந்தித்து பேசினார். அப்போது வர்த்தகம், முதலீடு உள்ளிட்ட துறைகளில் உறவை வலுப்படுத்துவது குறித்து இந்த சந்திப்பின்போது பேசப்பட்டது. #SaudiArabiaCrown #MohammedBinSalman #India
கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சமீபத்தில் சவுதி அரேபியா சென்றிருந்தார். அவரது அழைப்பின் பேரில் சவுதி அரேபியா இளவரசர் முஹம்மது பின் சல்மான் அல் சவுத், பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்த சுற்றுப்பயணத்தின்போது, இருநாடுகளுக்கு இடையில் சுமார் 2 ஆயிரம் கோடி டாலர் அளவிலான 8 புதிய ஒப்பந்தங்கள் கையொப்பமாகின.
அதன்பின்னர் பாகிஸ்தான் செனட் சபை உறுப்பினர்கள் சார்பில், தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி ஒன்று சவுதி இளவரசருக்கு பரிசாக வழங்கப்பட்டது. இது ஹெக்லர் அண்ட் கோச் எம்பி5கே ரக துப்பாக்கி ஆகும். இஸ்லாமாபாத்தில் இளவரசர் தங்கியிருந்த குடியிருப்புக்குச் சென்று பாகிஸ்தான் செனட் சபை தலைவர் சாதிக் சஞ்ரானி இந்த பரிசை வழங்கியுள்ளார். #GoldPlatedGun ##SaudiArabiaCrown #MohammedBinSalman #PakistanSenators
சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், முதலாவது அரசு முறை பயணமாக பாகிஸ்தான், இந்தியா, மலேசியா, இந்தோனேஷியா ஆகிய 4 நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதில் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் 2 நாட்களுக்கு இந்தியாவில் அவர் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
இதற்காக டெல்லி வரும் அவர் பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பின் போது, பயங்கரவாத எதிர்ப்பு, எரிசக்தி பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விரிவான பேச்சுவார்த்தை நடக்கிறது.
பட்டத்து இளவரசரின் இந்திய வருகையால், இந்தியா-சவுதி இடையிலான உறவுகள் மேலும் வலுவடையும் வரலாற்று சிறப்பு மிக்க வாய்ப்பு ஏற்பட்டு உள்ளதாக இந்தியாவுக்கான சவுதி தூதர் சவுத் முகமது அல் சதி கூறினார். வளர்ச்சி மற்றும் ஸ்திரத்தன்மை தொடர்பான எங்கள் பொதுவான நாட்டத்தின் அடிப்படையில் மிகவும் முக்கியமான கூட்டாளியாகவும், மதிப்பு மிக்க நண்பராகவுமே இந்தியாவை சவுதி அரேபியா பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார். #SaudiArabiaCrown #MohammedBinSalman #India
சவுதி நாட்டின் இளவரசர் முகமது பின் சல்மான் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இஸ்லாமாபாத்திற்கு வர இருக்கிறார். இந்த வார இறுதியில் சனி, ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களில் சவுதி இளவரசர் பாகிஸ்தான் செல்வார் என அறிவிக்கப்பட்டது.
இதற்காக 5 டிரக்குகளில் இளவரசரின் பயிற்சி சாதனங்கள், மரப்பொருட்கள், நாற்காலி மற்றும் அவர் பயன்படுத்தும் பொருட்கள் பாகிஸ்தானுக்கு முன்கூட்டியே அனுப்பி வைக்கப்பட்டன.
சவுதி இளவரசரின் பாதுகாப்பு குழுவினர் மற்றும் சவுதி பத்திரிக்கையாளர்களும் வந்திருந்தனர். பாகிஸ்தானுக்கு இளவரசராக வருகை தர உள்ளது இதுவே முதல் முறையாகும். முன்னதாக பாதுகாப்புத்துறை மந்திரியாக இருந்தபோது, ஏமன் உள்நாட்டுப் போர் தொடங்கிய காலத்தில் பாகிஸ்தானுக்கு வந்திருந்தார்.
இந்நிலையில் சவுதி இளவரசரின் பாகிஸ்தான் சுற்றுப்பயணம் ஒருநாள் தாமதமாக தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் (பிப்ரவரி 17, 18) அவர் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புல்வாமா தாக்குதலுக்கு இளவரசர் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், இந்த சுற்றுப் பயண தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சவுதி இளவரசர் பாகிஸ்தானில் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு, பிப்ரவரி 19ம் தேதி இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இந்தியாவிற்கு வருகை தர உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #SaudiPrince #MohammedbinSalman
இதையடுத்து 5 டிரக்குகளில் இளவரசரின் பயிற்சி சாதனங்கள், மரப்பொருட்கள், நாற்காலி மற்றும் அவர் பயன்படுத்தும் பொருட்கள் பாகிஸ்தானுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த பொருட்கள் அனைத்தும் நேற்று இஸ்லாமாபாத்தை அடைந்தன.
சவுதி இளவரசரின் பாதுகாப்பு குழுவினர் மற்றும் சவுதி பத்திரிக்கையாளர்களும் வந்துள்ளனர். பாகிஸ்தானுக்கு இளவரசராக வருகை தர உள்ளது இதுவே முதல் முறையாகும். முன்னதாக பாதுகாப்புத்துறை மந்திரியாக இருந்தபோது, ஏமன் உள்நாட்டுப் போர் தொடங்கிய காலத்தில் பாகிஸ்தானுக்கு வந்திருந்தார்.
சவுதி இளவரசரின் தற்போதைய சுற்றுப்பயணத்தின்போது, பிரதமர் இம்ரான் கான் மற்றும் ராணுவ அதிகாரிகளை சந்திக்க உள்ளார். இரு நாடுகளுக்கிடையே பல கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. . #SaudiPrince #MohammedbinSalman #Imrankhan
சவுதி அரேபியாவை சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி, துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி துணை தூதரகத்திற்கு கடந்த ஆண்டு அக்டோபர் 2-ந்தேதி, சென்றபோது படுகொலை செய்யப்பட்டார். இதில் சவுதி அரசுக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு உள்ளது. ஆனால் சவுதி அரசு இதனை மறுக்கிறது.
அந்த அறிக்கையில், “சவுதி அரேபிய அதிகாரிகளால் முன்னதாகவே திட்டமிடப்பட்டு மிருகத்தனமாக ஜமால் கசோக்கி கொலை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக குற்றவாளிகள் என்று 11 பேர் கைது செய்யப்பட்டு நடைபெற்று வரும் விசாரணையில் வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மை கவலை அளிப்பதாக உள்ளது. இது சம்பந்தப்பட்ட ஆதாரங்களை பெறுவதற்காக, சவுதி அரேபியாவிற்கு அதிகாரப்பூர்வமாக செல்ல அனுமதி கேட்டுள்ளேன். ஜமால் கசோக்கியின் கொலை தொடர்பான விசாரணையின் இறுதி அறிக்கை வரும் ஜூன் மாதத்தில் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலிடம் சமர்ப்பிக்கப்படும்”
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #JamalKhashoggi #MohammedBinSalman #UN
துருக்கி நாட்டின் தலைநகரான இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி அரேபியா நாட்டு தூதரகத்தில் பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொல்லப்பட்டதற்கு சவுதி இளவரசர் முஹம்மது பின் சல்மானுக்கு தொடர்பு இருப்பதாக அமெரிக்க பாராளுமன்றம் கடந்த வியாழக்கிழமை தீர்மானம் நிறைவேற்றியது.
மேலும், எங்கள் நாட்டின் தலைவரை அவமதிக்கும் வகையிலும், உள்நாட்டு விவகாரங்களில் தலையீடு செய்யும் விதமாகவும் சுமத்தப்படும் எவ்விதமான - அனைத்து விதமான குற்றச்சாட்டுகளையும் எங்கள் அரசு புறக்கணிக்கிறது’ என சவுதி அரேபியா அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #KhashoggiMurder #SaudiCrownPrince
வாஷிங்டன்:
சவுதிஅரேபியாவை சேர்ந்தவர் ஜமால் ஹசோக்கி. அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையின் நிருபராக இருந்து வந்தார். அவர் சவுதி அரேபிய அரச குடும்பத்தை கடுமையாக விமர்சித்து கட்டுரைகள் எழுதினார்.
துருக்கி நாட்டில் வசித்து வந்த அவர் அங்குள்ள சவுதிஅரேபியா தூதரகத்துக்கு சென்றார். அதன்பிறகு அவர் மாயமாகி விட்டார்.
தூதரகத்தில் வைத்து அவர் கொலை செய்யப்பட்டது பின்னர் தெரியவந்தது. இந்த கொலைக்கு பல நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்தன. அமெரிக்காவும் கண்டித்தது.
சவுதிஅரேபியாவின் இளவரசர் முகமது சல்மான் தூண்டுதலால் தான் இந்த கொலை நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
இதுசம்பந்தமாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ஹசோக்கி கொலை இளவரசர் சல்மானுக்கு நன்றாக தெரிந்திருக்கும் என்றும் குற்றம் சாட்டினார். இதனால் இரு நாடுகளுக்கும் இடையே உறவு பாதிக்கும் நிலை ஏற்பட்டது.
இதுசம்பந்தமாக டொனால்டு டிரம்ப் கூறும்போது, சவுதிஅரேபியா அமெரிக்காவில் மிகப்பெரிய அளவிலான முதலீடுகளை செய்ய உள்ளது. அந்த நாட்டுடன் எப்போதுமே நாங்கள் உறவை மேம்படுத்த விரும்புகிறோம். எங்கள் இரு நாடுகளின் உறவும் தொடர்ந்து நீடிக்கும் என்று கூறியுள்ளார்.
ஹசோக்கி கொலையால் சவுதிஅரேபியாவுடன் உள்ள உறவை அமெரிக்கா குறைத்துக் கொள்ளும் என்று எதிர்பார்த்த நிலையில் டிரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. #Journalistsmurder #trump
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்